انتقل إلى وضع عدم الاتصال باستخدام تطبيق Player FM !
தவறு யாருடையது? - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
Manage episode 286825907 series 2890601
தவறு யாருடையது?
அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.
அப்போது, பாலைக் கொண்டுவந்து அவர் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார் அவருடைய மனைவி.
அதிகாரி அதைக் கவனிக்காமல் எழுதிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது, கல்லூரியில் படிக்கும் அவர்களுடைய மகள் ஏதோ ஒரு புத்தகதை எடுப்பதற்குச் சென்றாள்.
மேஜை மீது இருந்த பால் குவளையில் அவள் கைபட்டு, பால் கொட்டிப் போயிற்று.
உடனே அந்தப் பெண், "அப்பா! என்னை மன்னித்து விடுங்கள், தவறுதலாக என் கைபட்டு, பால் கொட்டிவிட்டது" என்றாள்.
"அம்மா! உன் தவறு அல்ல, உன் தாய் பாலைக் கொண்டு வந்து வைத்ததுமே, அதை எடுத்து நான் குடித்திருக்க வேண்டும். அப்போதே குடிக்காதது என் தவறு" என்றார் அதிகாரி.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரியின் மனைவி வந்து, "உங்கள் இருவர்மீதும் தவறு இல்லை, நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது நான் கொண்டு வந்து பாலை வைத்தது என் தவறு" என்றாள்.
ஒவ்வொருவரும் தங்கள் தவறை உணர்ந்தது உள்ளத்தை நெகிழச் செய்தது.
தவறை உணர்வது எவ்வளவு நேர்மை!
---
இந்தக் கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி "மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்" என்ற தொகுப்பில் வெளியானது.
45 حلقات

Alla avsnitt
×مرحبًا بك في مشغل أف ام!
يقوم برنامج مشغل أف أم بمسح الويب للحصول على بودكاست عالية الجودة لتستمتع بها الآن. إنه أفضل تطبيق بودكاست ويعمل على أجهزة اندرويد والأيفون والويب. قم بالتسجيل لمزامنة الاشتراكات عبر الأجهزة.